ஒரே நேரத்தில் தண்ணீர் குடித்த 8 ஆடுகள் திடீர் சாவு விஷம் கலக்கப்பட்டதா? போலீசில் புகார்
பேரையூர் அருகே ஒரே நேரத்தில் தண்ணீர் குடித்த 8 ஆடுகள் திடீரென இறந்து விட்டன. அவை விஷம் கலக்கப்பட்டதால் இறந்ததா? என போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.;
பேரையூர்
பேரையூர் அருகே ஒரே நேரத்தில் தண்ணீர் குடித்த 8 ஆடுகள் திடீரென இறந்து விட்டன. அவை விஷம் கலக்கப்பட்டதால் இறந்ததா? என போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
8 ஆடுகள் திடீர் சாவு
பேரையூர் தாலுகா மங்கள்ரேவ் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 60). இவர் 20 ஆடுகளை வளர்த்து வந்தார்.சம்பவத்தன்று தனது ஆடுகளை அப்பகுதியில் உள்ள நிலங்களில் மேய்த்து விட்டு மீண்டும் மாலையில் ஆடுகளை வீட்டுக்கு அருகில் உள்ள கொட்டகைக்கு அழைத்து வந்தார்.
அங்குள்ள பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணீரை ஆடுகளுக்கு கொடுக்கும்போது, தண்ணீரை குடித்த 8 ஆடுகள் ஒவ்வொன்றாக மயக்கம் அடைந்து, வாயில் நுரை தள்ளி கீழே விழுந்து செத்தன. இதனால் மற்ற ஆடுகளை தண்ணீர் குடிக்க விடாமல் அவர் தடுத்துவிட்டார்.
போலீசில் புகார்
ஆடுகள் குடித்த தண்ணீரில் யாரோ விஷம் கலந்து விட்டதாக கார்த்திகேயன் சேடப்பட்டி போலீசில் புகார் செய்தார். சேடப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செத்த ஆடுகளை கால்நடை துறை டாக்டர் பெத்துராஜ் பிரேத பரிசோதனை செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.