பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற வாலிபர் மீது புகார்

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற வாலிபர் மீது புகார் செய்யப்பட்டது.;

Update:2022-11-14 00:13 IST

கீரமங்கலம் அருகே பெரியாளூர் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சுரேஷ் (வயது 36). சம்பவத்தன்று இவரது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது பின் பக்கமாக வந்து சுரேஷின் தாய் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை அதே பகுதியை சேர்ந்த சிவபெருமாள் மகன் வினோத் (35) பறிக்க முயன்றார். அப்போது அவர் சத்தம் போட்டதால் வினோத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்