கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

சிவகாசியில் கஞ்சா பறிமுதல் ெசய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.;

Update:2022-08-22 00:38 IST

சிவகாசி, 

சிவகாசி பகுதியில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கென சிறப்பு குழுக்களை நியமித்து பல்வேறு பகுதியில் திடீர் சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் இருந்து சிலர் கஞ்சாவை கடத்தி வந்து சிவகாசியில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யபோவதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் தலைமையில் போலீசார் விருதுநகர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் அருகில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர்களின் பதிலில் திருப்தி அடையாத போலீசார் அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்த போது அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித் துவிட்டு அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். 4 கிலோ கஞ்சா மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த மணி மகன் மகேந்திரன் (வயது 28), பகவதிராஜ் மகன் பிரபாகரன் (24), சுப்பிரமணி மகன் வெயில்முத்து (37) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் கொண்டு வந்த கஞ்சாவை யாருக்கு? வினியோகம் செய்ய இருந்தார்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்