மானாமதுரை
மானாமதுரை அருகே விளாக்குளம் கண்மாய் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு அப்பகுதியில் குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விளாக்குளத்தை சேர்ந்த முத்துராமலிங்கம்(வயது 55) என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 லிட்டர் கள்ளச்சாராயம், அதற்கு பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.