ஸ்கேட்டிங் தளம் அமைக்கும் பணி

ஸ்கேட்டிங் தளம் அமைக்கும் பணி

Update: 2022-10-01 20:09 GMT

அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் ஸ்கேட்டிங் தளம் அமைக்கும் பணியை அரசு முதன்மை செயலாளர் அபூர்வா ஆய்வு செய்தார்.

அன்னை சத்யா விளையாட்டு மைதானம்

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நவீன உள் விளையாட்டு அரங்கம், டென்னிஸ் அரங்கம், இறகுப்பந்து, வாலிபால், ஆக்கி, கால்பந்து, கபடி ஆகியவற்றுக்கான மைதானம் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்டவை உள்ளன. இந்த மைதானத்தில் சர்வதேச அளவிலான செயற்கை ஓடுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த தடகள ஓடுதளத்தின் அருகே சர்வதேச அளவிலான கால்பந்தாட்ட மைதானமும் அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்கேட்டிங் பயிற்சிக்கு இடவசதி இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஸ்கேட்டிங் பயிற்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்கேட்டிங் தளம் அமைக்கும் பணி

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்கேட்டிங் விளையாட்டு தளம், வாலிபால் விளையாட்டு தளம், கழிப்பறைகள், நுழைவு வாயில் ஆகியவை ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த திட்டத்தின் கீழ் நடைப்பயிற்சி பாதை, மின் விளக்குகள், பார்வையாளர்களுக்கான இருக்கைகள் ஆகியவை ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது.

இந்தநிலையில் ஸ்கேட்டிங் விளையாட்டுத் தளம் அமைக்கப்பட்டு வருவதை தமிழகஅரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மை செயலாளர் அபூர்வா நேற்றுகாலை ஆய்வு செய்தார். மேலும் அவர், செயற்கை ஓடுதளம் அமைக்கப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர், இந்த பணிகளை உரிய காலத்துக்குள் தரமாக செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    
Show comments

மேலும் செய்திகள்