கன்டெய்னர் லாரியில் தீ விபத்து - ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்..!

திருவள்ளூர் அருகே கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்து உள்ளது.;

Update:2022-05-26 09:14 IST


திருவள்ளூர் அருகே போலிவாக்கம் பகுதியில் தனியார் ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆர்டர் செய்த சுமார் ஒரு கோடி ரூபாய் மிதிப்புள்ள பொருட்கள் கன்டெய்னர் லாரியில் சாலை மார்க்கமாக டெல்லிக்கு புறப்பட்டது.

இந்த கன்டெய்னர் லாரி இன்று அதிகாலை போலிவாக்கம் பகுதியிலிருந்து திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெங்கத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கன்டெய்னரில் இருந்து புகைமூட்டம் கிளம்பியது.

இதை அறிந்த லாரி டிரைவர் வாகனத்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு போலீசார், தீயணைப்புத்துறை, நிறுவனத்திற்கும் தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த மணவாளநகர் போலீசார் லாரியை திறந்து பார்த்தபோது உள்ளே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் மளமளவென கன்டைனர் முழுவதும் தீ பற்றியதால் திருவூர் மற்றும் திருவள்ளூர் தீயணைப்பு துறை விரைந்து வந்த சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தில் கன்டெய்னர் லாரியில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது

சம்பவ இடத்தில் திருவள்ளூர் துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் மற்றும் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆன்லைனில் ஆடர் செய்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் கொண்டு செல்லும் கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்