கூட்டுறவு நகர வங்கி நிர்வாக குழு கூட்டம்
பாபநாசம் கூட்டுறவு நகர வங்கி நிர்வாக குழு கூட்டம் நடந்தது.;
பாபநாசம்:
பாபநாசம் கூட்டுறவு நகர வங்கியின் இறுதி நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வங்கியின் தலைவர் சபேசன் தலைமை தாங்கி வங்கியின் வளர்ச்சி மற்றும் கடன்கள் வழங்குதல் குறித்து பேசினார். வங்கி மேலாண் இயக்குனர் விஜயமாலா, பொது மேலாளர் தியாகராஜன், இயக்குனர் ரத்தினகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் துணைத் தலைவர் சதீஷ், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வங்கி மேலாளர் ஆனந்தி நன்றி கூறினார்.