நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-10-26 21:23 GMT

தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் சுமார் 3 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவு தயார் செய்யப்படும் சமையல் கூடம் மேலப்பாளையம் மண்டலத்தில் இயங்கி வருகிறது. இந்த சமையல் கூடத்துக்கு நேற்று காலையில் மாநகராட்சி ஆணையாளர் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அவர் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகளின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை கடை உரிமையாளர்கள் உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். பின்னர் அவர், நெல்லை சந்திப்பு பஸ்நிலைய பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இந்த பஸ்நிலையத்தை முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது மாநகர பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் வாசுதேவன், உதவி ஆணையாளர் காளிமுத்து மற்றும் சுகாதார அலுவலர், ஆய்வாளர்கள் பலர் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்