கிணற்றில் விழுந்த பசுமாடுகள் உயிருடன் மீட்பு

அரக்கோணம், கலவையில் கிணற்றில் விழுந்த பசுமாடுகள் உயிருடன் மீட்கப்பட்டன.;

Update:2023-05-10 01:19 IST

அரக்கோணம் அடுத்த குருவராஜபேட்டை செம்பேடு கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் பசு மாடு ஒன்று விழுந்து இருப்பதாக அரக்கோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நிலைய அலுவலர் மஹபூப் பேக் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது சுமார் 50 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் விழுந்து இருந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் மூலம் பத்திரமாக உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

கலவையை அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் நேற்று காலை 6.15 மணியளவில் தனது பசு மாட்டை நிலத்திற்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவருக்கு சொந்தமான 80 அடி ஆழமுள்ள கிணற்றில் பசு மாடு தவறிவிழுந்துள்ளது. உடனடியாக கலவை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் தீயணைப்புத் துறையினர் சென்று கயிறு கட்டி பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்