என்ஜினீயர் உடல் கிருஷ்ணகிரிகொண்டு வரப்பட்டு உடல் தகனம்

மும்பை கிரேன் விபத்தில் உயிர் இழந்த என்ஜினீயரின் உடல் கிருஷ்ணகிரிக்கு வந்தது. இறுதி சடங்கிற்கு பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது.;

Update:2023-08-03 00:15 IST

என்ஜினீயர் பலி

கிருஷ்ணகிரி போகனப்பள்ளி ஊராட்சி வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 36). என்ஜினீயர். இவருக்கு மனைவியும், 5 வயதில் மகளும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். கட்டுமான துறையில் 12 ஆண்டுகள் பணிபுரிந்து வந்த சந்தோஷ், கடந்த 3 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

அந்த நிறுவனத்தின் மூலம் மராட்டிய மாநிலம் தானேவில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த பணியில் சந்தோசும் பணியாற்றி வந்தார். கடந்த 31-ந் தேதி அங்கு பணியின் போது ராட்சத கிரேன் அறுந்து விழுந்தது. இதில் சந்தோஷ் உள்பட 20 பேர் பலியானார்கள்.

உடல் தகனம்

பலியான சந்தோஷின் உடலை அங்கேயே பிரேத பரிசோதனை முடிந்து விமானம் மூலம் நேற்று அதிகாலை பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் நேற்று காலை 7 மணி அளவில் சந்தோஷின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். தொடர்ந்து இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்