நெகமம் பகுதியில் பார்த்தீனியம் களைச்செடிகளால் பயிர் மகசூல் பாதிப்பு
நெகமம் பகுதியில் பார்த்தீனியம் களைச்செடிகளால் பயிர் மகசூல் பாதிப்பு;
நெகமம்
நெகமம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறி, வாழை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. பார்த்தீனியம் களை செடிகள் அதிகமாக காணப்படுவதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். அனைத்து காலநிலைகளிலும் செழித்தும் வளரும் தன்மை உடைய, பார்த்தீனிய செடியின் விதைகள் காற்று மற்றும் நீர் மூலம் பரவும். மேலும் அவை பயிர்களின் வளர்ச்சியை பாதிப்பதால், 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இந்த களை செடிகளால் விவசாய தொழிலாளர்களுக்கும் ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. பார்த்தீனியம் களை செடிகள் பரவலால், களை எடுப்பது, உரமிடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, மருந்து தெளிப்பது உள்ளிட்ட பணிகளை விளைநிலங்களில் மேற்கொள்ள முடியவில்லை. காய்கறி சாகுபடிக்காக செலவு செய்தும், களைச்ெசடிகளால் விளைச்சல் பாதிப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே, பார்த்தீனியம் களைச்செடிகளை கட்டுப்படுத்த வேளாண்மைத்துறையினர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.