பிரியாணியில் கரப்பான் பூச்சி உள்ள வீடியோ வைரல்..! அதிர்ச்சியில் பிரியாணி பிரியர்கள்..!

ஆரணியில் அசைவ ஓட்டலில் சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சியை கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2022-07-02 05:05 GMT

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகில் தனியார் அசைவ ஓட்டல் இயங்கி வருகின்றன. இந்த ஓட்டலில் நேற்று மதியம் ஆரணி அருகே நேத்தபாக்கம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் மட்டன் பிரியாணி சாப்பிட்டதாக தெரிகின்றன. மேலும் மட்டன் பிரியாணி சாப்பிட்ட போது பேரதிர்ச்சியாக சாப்பிட்ட பிரியாணியில் மட்டன் துண்டுக்கு பதிலாக கரப்பான் பூச்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் கடையின் ஊழியரிடம் தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வைரலாக வீடியோ சமூக வளைதலங்களில் பரவி வருகின்றன.

ஏற்கனவே சிக்கன் பிரியாணி சிக்கன் தந்தூரி சாப்பிட்டு மாணவன் ஓருவன் சிறுமி ஆகிய 2 பேர் உயிரழந்த சம்பவம் நடந்தேறியுள்ளன. மேலும் நேற்று நடந்த இச்சம்பவத்தால் ஆரணியில் அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உணவு பாதுகாப்பு துறையினர் கண்துடைப்புக்கு ரெய்டு செய்யாமல் தொடர்ந்து ஆய்வு செய்து சுத்தமான முறையில் அசைவ உணவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்