பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2022-07-29 17:13 GMT

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டத்தில் 67 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 37 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 12,490 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.34 கோடி மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள் வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது. திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழகத்தில் படிப்பு மட்டுமின்றி நலன் தரும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.

இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு எதிர்காலத்தினை ஒளிமயமானதாக உருவாக்கி கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி, திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன், ஒன்றிய சேர்மன் சண்முகவடிவேல், பேரூராட்சி துணை சேர்மன் கான்முகமது, ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பள்ளத்தூர் ரவி, கே.எஸ்.நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் மாணிக்கவாசகம், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.புதூர் கண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், நேரு, ரெமிசுலைமான், சீனிவாசன், பாண்டியன், சரண்யா, ஹரி, ராஜேஸ்வரி, அபுதாகீர், சோன.வைரமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், தலைமை ஆசிரியர்கள் முருகேசன், பாலதிரிபுரசுந்தரி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்