ரூ.9 லட்சத்தில் தடுப்பணை கட்டும் பணி

கல்வராயன்மலையில் ரூ.9 லட்சத்தில் தடுப்பணை கட்டும் பணியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-06-05 17:45 GMT

கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலையில் உள்ள தாழ்வாழப்பாடி கிராமத்தில் உள்ள ஓடையில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.9 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மணி தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் யோகஜோதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)சுரேஷ், செயற்பொறியாளர் செல்வகுமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் புஷ்பராஜ், ஒன்றியக்குழு தலைவர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர் அருண் ராஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் ஸ்ரீதர் கலந்துகொண்டு தடுப்பணை கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த கல்வராயன்மலையில் இந்தாண்டு முதல்கட்டமாக 40 தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். இது குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிறந்த வழியாக இருக்கும் என்றார். இதையடுத்து கல்வராயன்மலை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு 248 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் அசோக்குமார், வருவாய் ஆய்வாளர் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம், ஊராட்சி செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்