500 ஏக்கரில் வாழை, கரும்புகள் சேதம்

எடப்பாடி பகுதியில் வீசிய சூறைக்காற்றால் 500 ஏக்கரில் வாழை, கரும்புகள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2022-05-29 20:24 GMT

எடப்பாடி:

எடப்பாடி பகுதியில் வீசிய சூறைக்காற்றால் 500 ஏக்கரில் வாழை, கரும்புகள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சூறைக்காற்று

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நெடுங்குளம், 4 ரோடு, காட்டூர், வளையசெட்டியூர், பூலாம்பட்டி, கூடக்கல், காசிகாடு, பில்லுகுறிச்சி, கோனேரிப்பட்டி, பூமணியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்று வீசியது.

இதனால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இந்த சூறைக்காற்றால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

500 ஏக்கர்

இந்த சூறைக்காற்றால் எடப்பாடி பகுதியில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு, வாழை, பப்பாளி மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சூறைக்காற்றால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்