ஆபத்தான வழிகாட்டி பலகை
தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் இருந்து தஞ்சைக்கு வரும் சாலையோரத்தில் மாநகராட்சி சார்பில் வழிக்காட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி பலகையில் தஞ்சை பெரிய கோவில், சிவகங்கை பூங்கா, தஞ்சை ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கான வழிகள் குறிப்பிடபட்டுள்ளன.
இந்த வழிகாட்டி பலகை தற்போது துருபிடித்த நிலையில் அந்தரத்தில் தொங்கியவாறு காணப்படுகிறது. இதனால் இந்த வழிகாட்டி பலகை வழியாக செல்ல பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள வழிகாட்டி பலகையை சீரமைக்கவேண்டும்.
-தொல்காப்பியர் சதுக்கம் பொதுமக்கள், தஞ்சாவூர்.