மாரண்டஅள்ளி ரெயில் நிலையத்தில் காத்திருப்பு அறையில் மயங்கி விழுந்தவர் சாவு
மாரண்டஅள்ளி
மாரண்டஅள்ளி ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை ஆந்திராவை சேர்ந்த ராமமூர்த்தி ரெட்டி (வயது 55) என்பவர் வந்தார். பெங்களூரு ெரயில் குறித்து விசாரித்தவர் ெரயில் வர நீண்ட நேரம் இருப்பதால் பயனிகள் காத்திருக்கும் அறையில் அமர்ந்திருந்தார். அப்போது சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக ெரயில் நிலைய மேற்பார்வையாளர் வைத்தியலிங்கம் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.