அரசு பள்ளி ஆசிரியைக்கு கொலை மிரட்டல்
கிணத்துக்கடவில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.;
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பெரியார் நகர் 7-வது வீதியை சேர்ந்தவர் அம்பிகாவதி(வயது 50). சிக்கலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உதவி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அம்பிகாவதிக்கு சொந்தமான ஒரு கட்டிடத்துக்குள் நுழைந்த சாலமன் ஜான்சன்(29) என்பவர் திடீரென முன்விரோதத்தில் பொருட்களை சேதப்படுத்தினார். இதை தடுக்க முயன்ற அம்பிகாவதியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசில் அம்பிகாவதி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சாலமன் ஜான்சனை வலைவீசி தேடி வருகிறார்.