பெண்ணுக்கு கொலை மிரட்டல்வாலிபர் கைது

நாகர்கோவிலில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் வாலிபர் கைது

Update: 2023-04-16 20:25 GMT

நாகர்கோவில், 

நாகா்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் முருகன். இவருடைய மனைவி சுதா (வயது 42). இவருக்கும் அதேபகுதியை சோ்ந்த அனீஷ் (21) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சுதா தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அனீஷ், சுதாவை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அனீசை கோட்டார் போலீசார் கைது செய்தனர். இவர் மீது கோட்டார் போலீஸ் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்