சேலம் அஸ்தம்பட்டியில் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம் அஸ்தம்பட்டியில் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்;

Update:2023-07-06 01:49 IST

சேலம்

தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறை அனைத்து நிலை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் சேலம் அஸ்தம்பட்டியில் பட்டுவளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கோவிந்தராஜூலு தலைமை தாங்கினார். துணை தலைவர் சுலைமான், பொதுச்செயலாளர் அகோரம், பொருளாளர் செபாஸ்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்மொழி தேர்வில் விலக்கு அளிக்கப்பட்ட ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து நிலுவை தொகை மற்றும் திருந்திய ஓய்வூதியம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில்க லந்து கொண்டவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்