தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update:2023-10-04 00:11 IST

கடந்த 2021-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய பேரணியில், காரை ஏற்றி 4 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தூண்டியதாக மத்திய மந்திரி மிஸ்ரா டெனி மீது குற்றம்சாட்டி உள்ள தொழிற்சங்கத்தினர் அவரை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் தனசேகரன், சுந்தரமூர்த்தி, வேலுசாமி, பழனிவேலு, பாலாஜி, மாதேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கறுப்புகொடி ஏந்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்