விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update:2023-03-06 00:15 IST

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அடுத்துள்ள வசந்த நகர் பஸ் நிறுத்தம் அருகே நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய குழு உறுப்பினர் வாசுதேவ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விசைத்தறி கூலி தொழிலாளர்களுக்கு, 2 மாத காலத்திற்குள் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த முறை நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் 2 மாத காலத்திற்குள் கூலி உயர்வு பேச்சுவார்த்தையை சுமுகமாக பேசி தீர்க்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் அசோகன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய உதவி செயலாளர் குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்