நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுக்கடைகளை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்;

Update:2023-06-13 00:15 IST

நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் மது கடைகளை மூட வேண்டும் என்றும், எதிர்கால தலைமுறைகளை பாதுகாத்து வழிநடத்திட தமிழகத்தில் முன்மாதிரியாக சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மது கடையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் கோட்டை குமார் தலைமையில் மண்டல செயலாளர் சாயல் ராம், மாவட்ட செயலாளர்கள் குகன் மூர்த்தி (தெற்கு), சஞ்சீவி (வடக்கு), தொகுதி செயலாளர்கள் கிருஷ்ணன் (சிவகங்கை), ஆனந்த் (மானாமதுரை), மகளிர் பாசறை மாநில செயலாளர் சண்முகப்பிரியா, மாவட்ட செயலாளர் மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்