மின்சார திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மின்சார திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-09 18:58 GMT

மத்திய அரசு மின்சார திருத்த மசோதாவை கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தம் மின்வினியோகத்தை தனியாரை அனுமதிக்கவும், மின்சார ஒழுங்கு முறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவும், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மின்கட்டணத்தை நிர்ணயிப்பது போன்றவற்றுக்கும் வழிவகை செய்வதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் தாக்கல் செய்தார். மசோதா தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள மின் பகிர்மான மின் உற்பத்தி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரிய கூட்டுக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மின்சார திருத்த மசோதாவை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்