முறப்பநாடு சம்பவத்தை கண்டித்துகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்விழுப்புரம் மாவட்டத்தில் 7 இடங்களில் நடந்தது

முறப்பநாடு சம்பவத்தை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் 7 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-04-25 18:45 GMT


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், சட்டவிரோதமாக மணல் கடத்தலை தடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் அவரை அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குள் புகுந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர். இந்த கொலையில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய வேண்டும், தமிழக அரசு பணி பாதுகாப்பு சட்டத்தினை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் அந்தந்த தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செஞ்சியில் வட்ட செயலாளர் முத்து தலைமை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த உறுப்பினர் புகழேந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் வெற்றி கொண்டான், விமல், முத்துக்குமார், ராஜாராம், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் விக்கிரவாண்டியில் மாவட்ட இணை செயலாளர் மணிபாலன் தலைமையிலும், கண்டாச்சிபுரத்தில் வட்ட செயலாளர் தேசிங்கு, திருவெண்ணெய்நல்லூரில் வட்ட செயலாளர் பாரதிராஜா, மேல்மலையனூரில் மாவட்ட தலைவர் பாலாஜி, திண்டிவனத்தில் மாவட்ட அமைப்பு செயலாளர் உமாசங்கர், வானூரில் வட்ட செயலாளர் ஜம்புகாந்தன் தலைமையிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்