தமிழர் நீதிக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி தமிழர் நீதிக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update:2023-06-18 00:06 IST

பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகள் அபிநயா (வயது 23). தந்தை இறந்துவிட்ட நிலையில் குடும்பத்தை காப்பாற்றவும், வறுமை காரணமாகவும் இவர் அரியலூரில் உள்ள ஒரு மளிகைக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அபிநயாவின் காதலர் பார்த்திபன் (32) அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் விபத்து ஏற்படுத்தியதில் உடையார்பாளையம் அருகே அபிநயா உயிரிழந்தார்.

இதையடுத்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் நீதிக்கட்சி, ஏர் உழவர் சங்கம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் இளவரசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி தலைவி கவியரசி மற்றும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்