டெங்கு கொசு ஒழிப்பு பணி
ஏலகிரி மலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.;
ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலையில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் ஏலகிரி மலை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஏலகிரி மலை ஊராட்சி இணைந்து ஏலகிரி மலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து கொசு மருந்து அடிக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
ஏலகிரி மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை டாக்டர் சுமன், ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமால் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள், கொசு புழு அழிப்பு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.