கல்வராயன்மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.;

Update:2023-03-12 00:15 IST

கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலையில் உள்ள வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜீக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கரியாலூர் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார், கல்வராயன்மலையில் உள்ள வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது முண்டியூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 1000 லிட்டா் சாராய ஊறலை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் அமைத்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்