வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகள்

வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகள் நடைபெற்றன.

Update: 2023-03-08 20:45 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகள் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை மாவட்ட ஆய்வாளர் செல்வகுமார் போட்டிகளை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் அசோகன், சாந்திராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதா, தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி ஆகியோர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தா.பழூர் வட்டாரம் முழுவதும் உள்ள 33 மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த 128 மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். மாணவர்கள் கடந்த 2 மாதங்களில் வானவில் மன்ற செயல்பாடுகள் மூலம் அறிந்து கொண்ட தலைப்புகளில் அன்றாட வாழ்வில் அவற்றின் பயன்பாடுகள் என்கிற தலைப்பில் செயல் விளக்க மாதிரிகள் தயார் செய்து அவற்றை காட்சிப்படுத்தி போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கு நடுவர்களாக குணசேகரன், இளங்கோவன், மத்தியாஸ், நடராஜன் மற்றும் வானவில் மன்ற கருத்தாளர்கள் செயல்பட்டனர். மாணவர்கள் அவர்கள் செய்து கொண்டு வந்திருந்த மாதிரிகள் செயல்படும் விதங்கள் குறித்து நடுவர்களிடம் விரிவாக எடுத்துக்கூறினார். அவற்றுள் சிறந்த அறிவியல் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அதனை தயார் செய்து நடுவர்களிடம் விளக்கி வெற்றி பெற்ற 8 மாணவ- மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்