தொப்பம்பட்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பிரிவுபசார விழா
தொப்பம்பட்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பிரிவுபசார விழா;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே தொப்பம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பிரிவுபசார விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் தேவி, மகாலட்சுமி, உஷா, மனுவேல்ராஜன் ஆகியோர் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மலர் கிரீடம் சூட்டினர். பின்னர் பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் நினைவு பரிசு வழங்கினார். மாணவர்கள் பள்ளியில் நடந்த நினைவுகளை விழாவில் பகிர்ந்து கொண்டனர். விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.