வீரபாண்டியில் ஜனவரி 4-ந்தேதி அதிமுக பொதுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

ஜனவரி 4-ந்தேதி சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.;

Update:2025-12-30 15:12 IST

கோப்புப்படம் 

அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக, தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்துடனான எழுச்சிப் பயணத்தின் தொடர்ச்சியாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4-1-2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

5-1-2026 (திங்கட்கிழமை) அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்