இந்து மதத்தினரின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு தடுக்கிறது; மத்திய மந்திரி எல்.முருகன்

அம்பேத்கரையும், அரசியலமைப்பு சாசனத்தையும் திமுக அரசு அவமதித்துள்ளது.;

Update:2025-12-30 15:56 IST

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக திருப்பரங்குன்றம் முருகன் கோவில் திகழ்கிறது. இந்நிலையில், மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

அம்பேத்கரையும், அரசியலமைப்பு சாசனத்தையும் திமுக அரசு அவமதித்துள்ளது. திமுக அரசு முருக பக்தர்களை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற தடுத்தது மட்டுமல்லாமல் தீபத்தூணில் விளக்கு ஏற்ற பக்தர்களுடன் சென்ற சிஆர்பிஎப் வீரர்களையும் திருப்பி அனுப்பியது. தனி நபர் மத வழிபாட்டு உரிமை அடிப்படை உரிமை என்பதை அரசியலமைப்பு சாசனம் உத்தரவாதம் அளிக்கிறது. பக்தர்கள் மத வழிபாடு செய்தவதை தடுக்க திமுக அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்து மதத்தினரின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு தடுக்கிறது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதியின் தீர்ப்புக்கு திமுக அரசு மேல்முறையீடு செய்துளது. மேலும், வழிபாடு நடத்த சென்ற பக்தர்களை திமுக அரசு தடுத்து நிறுத்தியது. இதனால் முருக பக்தர்கள் திமுக அரசு மீது கோபத்தில் உள்ளனர்.

மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்தாமல் நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்து வருகிறது. அரசியலமைப்பு சாசனத்தை திமுக அரசு மிதித்துக் கொண்டிருக்கிறது. திமுக அரசின் அட்டூழியங்கள், அராஜகத்தை முருகப்பெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறார். திமுக அரசுக்கு பாடம் கற்பித்து அந்த அரசை முடிவுக்கு கொண்டுவர குறுகிய காலமே ஆகும். கடவுளுடன் விளையாடியவர்கள் முன்னேறியதாக வரலாறு இல்லை

என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்