குண்டர் சட்டத்தை உள்நோக்கத்துடன் பிரயோகித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

உள்நோக்கத்துடன் குண்டர் தடுப்பு சட்டத்தை பிரயோகிக்கும் காவல் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-12-30 15:58 IST

சென்னை,

சார்-பதிவாளரை பணம் கேட்டு மிரட்டியதாக வராகி என்பவரை மயிலாப்பூர் போலீஸார் செப்.13-ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். யூடியூபர் வாராகியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவரின் மனைவி நீலிமா வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வராகிக்கு 3 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 12 வாரங்களுக்குள் போலீசார் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உள்நோக்கத்துடன் குண்டர் தடுப்பு சட்டத்தை பிரயோகிக்கும் காவல் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்