நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் திமுக - தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு

தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Update: 2024-01-19 05:25 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அதை எதிர்கொள்வதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. தேர்தலை கவனிப்பதற்காக தனியாக நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

இந்தநிலையில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது. 3 பிரிவுகளில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக கனிமொழி எம்.பி. உள்ளார். உறுப்பினர்களாக டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., எம்.எம்.அப்துல்லா எம்.பி.,எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளார். உறுப்பினர்களாக கே.என்.நேரு, இ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா எம்.பி., எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்திடும்  குழுவில் கூடுதலாக திருச்சி சிவா எம்.பி சேர்க்கப்பட்டுள்ளார்.



 



 




 



Tags:    

மேலும் செய்திகள்