தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்; ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

சங்கரன்கோவிலில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;

Update:2023-04-18 00:15 IST

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் இளைஞர்கள், இளம்பெண்கள், மாற்றுக் கட்சியினர் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

முகாமில் மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட பிரதிநிதி செய்யதுஅலி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் மகாராஜன், அன்சாரி, ஜிந்தாமைதீன் ரகுமான், இளைஞர் அணி சரவணன், மாணவர் அணி கார்த்தி, அப்பாஸ் அலி, அப்துல் காதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்