போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம்
பெரியபட்டினத்தில் போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;
ராமநாதபுரம்,
திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்ட பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் மாணவர்கள் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் தலைமை ஆசிரியர் சேகர் தலைமையில் நடைபெற்றது. கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவர்கள் போதை ஒழிப்பு சம்பந்தமாக கோஷங்கள் எழுப்பி, பதாகைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மைகுழு தலைவர் முகமது சலீம், துணைத்தலைவர் பாத்திமா, திருப்புல்லாணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா, பாலமுருகன், உறுப்பினர்கள் முகமது களஞ்சியம், முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலர் முத்துக்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.