முருங்கைக்காய் விலை வீழ்ச்சி
வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்தில் முருங்கைக்காய் விைல வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. காய்களை பறிக்காமல் செடிகளில் விவசாயிகள் விட்டு விட்டனர்.;
வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்தில் முருங்கைக்காய் விைல வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. காய்களை பறிக்காமல் செடிகளில் விவசாயிகள் விட்டு விட்டனர்.
முருங்கைக்காய்
திருப்பூர் மாவட்டத்ைத பொறுத்தவரை வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம், குண்டடம் பகுதிகளில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் முருங்கைக்காய்கள் மொத்த கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த பகுதியில் விளையும் முருங்கைக்காய் தனி ருசி கொண்டது. சாம்பாரில் போட்டவுடன் கமகம வென்று மணம் வீசும். இதனால் வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம், குண்டடம் பகுதியில் விளையும் முருங்கைக்காய்களுக்கு தனி கிராக்கி உண்டு.
முருங்கை சாகுபடியில் 3 வகை உள்ளது. அவை செடிமுருங்கை, கரும்பு முருங்கை மற்றும் மர முருங்கையாகும்.இவற்றை வார ஒரு முறை பறித்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். அதன்படி நேற்று வெள்ள கோவிலில் நடந்த கொள்முதல் நிலையத்திற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் முருங்கைக்காய்களை கொண்டு வந்தனர்.
விலை குறைந்தது
இந்த கொள்முதல் நிலையத்திற்கு 70 விவசாயிகள் மொத்தம் 6 டன் முருங்கைக்காய் களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இவற்றை வாங்குவதற்கு வெள்ளகோவில், முத்தூர், மூலனூர், சின்னதாராபுரத்தை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். அதன்படி ஒரு கிலோ மரம் முருங்கை ரூ.5 -க்கும், செடிமுருங்கை ரூ.5-க்கும், கரும்பு முருங்கை ரூ.8-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. விலை குறைவால் முருங்கை காய்களை மரத்தில் விவசாயிகள் பறிக்க வில்லை என்று முருங்கை வியாபாரி செல்லப்பகவுண்டர் கூறினார்.