தீயில் எரிந்து எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நாசம்

தீயில் எரிந்து எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நாசம்

Update: 2022-11-30 18:45 GMT

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி வடக்கு கிராமம், புது ரோடு அருகே கடை நடத்தி வருபவர் வேலவன். நேற்று இரவு இவர் தனது கடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை எடுத்துள்ளார். அப்போது மோட்டார்சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் மோட்டார்சைக்கிள் நாசமானது. மோட்டார்சைக்கிளில் இருந்த 5 ஏ.டி.எம். கார்டுகள், ஓட்டுனர் உரிமம் ஆகியவை எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்