வால்பாறை
வால்பாறை பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால் நீர்நிலைகள் வற்ற தொடங்கிவிட்டன. இதன் காரணமாக காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீரை தேடி அலைந்து திரிகின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் குட்டிகளுடன் 11 யானைகள் கொண்ட கூட்டம், வால்பாறை அருகே உள்ள வெள்ளமலை டனல் ஆற்றுக்கு வந்தன. தொடர்ந்து தண்ணீரில் இறங்கி குளித்து விளையாடி மகிழ்ந்தது. இதுபோன்று பல்வேறு நீர்நிலைகளிலும், அதனருகில் உள்ள வனப்பகுதிகளிலும் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் முகாமிட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.