தனியார் நிறுவனத்தில் திருடிய ஊழியர் கைது

சின்னவேடம்பட்டியில் தனியார் நிறுவனத்தில் திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-10-03 01:45 IST


கணபதி


கோவை கணபதியை அடுத்துள்ள சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து வேலை முடிந்து ஊழியர்கள் வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து காவலாளிகள் அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டீல் பெல்ட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை தனியார் நிறுவனத்தினர், சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த மார்ட்டின் அமலதாஸ் (வயது 42) என்பதும், தனியார் நிறுவனத்தில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்