வேலைவாய்ப்பு அலுவலகம் புதிய கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றம்

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் புதிய கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது.;

Update:2022-08-18 23:54 IST

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் பழைய பி.எஸ்.என்.எல் அலுவலக கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது திருப்பத்தூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரைதளம் 'சி' பிளாக்கில் இயங்கி வருகிறது. எனவே திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள் தங்களது கல்வி தகுதியினை பதிவு மற்றும் புதுப்பித்தல், முன்னுரிமை மற்றும் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவி தொகை, போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆகிய விவரங்களுக்கு மேற்படி அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயனடையலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்