செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-15 11:38 GMT

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை ஐகோர்ட்டில் 2-வது முறையாக ஜாமீ்ன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இன்று பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர வழக்கில் வேறு எந்த மாற்றமும் இல்லை. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க கூடும். கோர்ட் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என  அமலாக்கத்துறை  ஜாமீன் அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக இந்த வழக்கின் விசாரணை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்