என்ஜினீயரிங் படிப்பு: துணை கலந்தாய்வுக்கு 9-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வுக்கு 9-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2022-11-06 02:15 GMT

கோப்புப்படம்       

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புக்கான பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 சுற்றுகளாக நடைபெறும் இந்த கலந்தாய்வு நடைமுறைகள் 10-ந்தேதியுடன் முடிக்கப்பட்டு, 13-ந்தேதி இறுதி ஆணை வழங்கப்பட உள்ளது.

முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்கள், அடுத்தகட்டமாக துணை கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை இந்த துணை கலந்தாய்வுக்கு பதிவு செய்யலாம்.

https://www.tneaonline.org/ என்ற இணையதளம் வாயிலாகவும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய 110 என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் கலந்தாய்வுக்கு பதிவு செய்யலாம்.

சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 12-ம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி படித்த, தகுதி வாய்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள், பொது கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணவர்களும் இந்த துணை கலந்தாய்வில் பங்கு பெறலாம்.

Tags:    

மேலும் செய்திகள்