மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் மாயம்

சென்னை மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் மாயமானார்.;

Update:2022-06-05 12:04 IST

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முரளி. இவருடைய மகன் சாய் சரண் (வயது 21). இவர், என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். சாய் சரண் சென்னை சேத்துபட்டில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக குடும்பத்தோடு சென்னை வந்ததாக தெரிகிறது. நேற்று மதியம் சாய் சரண், தனது நண்பர்களோடு மெரினா கடற்கரைக்கு குளிப்பதற்காக சென்றார்.

பின்னர் கடலில் நண்பர்களோடு குதூகலமாக குளித்து கொண்டிருந்த சாய் சரண், திடீரென கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கி மாயமானார். அவரை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அண்ணா சதுக்கம் போலீசார், மாயமான மாணவர் சாய் சரணை மெரீனா மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்