தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வை 5,590 மாணவ, மாணவிகள் எழுதினர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 மையங்களில் நடந்த தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வை 5590 மாணவ, மாணவிகள் எழுதினர்.

Update: 2023-10-15 19:30 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 மையங்களில் நடந்த தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வை 5590 மாணவ, மாணவிகள் எழுதினர்.

தமிழ் இலக்கிய திறனறிவுத் தேர்வு

தமிழ்நாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளின் தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்தி கொள்ளும் வகையில் பிளஸ்-1 மாணவர்களுக்கு தமிழ் மொழியில் இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 67 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 1,500 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

5,590 பேர் எழுதினர்

அதன்படி இந்தாண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 50 சதவீதம், அரசு மற்றும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ. பொது பிரிவு என 50 சதவீத மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் கல்வி மாவட்டத்தில் 7 மையங்களிலும், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 12 மையங்களிலும் என மொத்தம் 19 மையங்களில் தேர்வு நடந்தது. விண்ணப்பித்த 6 ஆயிரத்து 24 பேரில், 5,590 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 434 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதவில்லை. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு 2 ஆண்டுகள் மாதம் ரூ.1,500 பெற உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்