10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாயின் 2-வது கணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.;

Update:2022-10-16 00:42 IST

சேந்தமங்கலம்

பள்ளி மாணவி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு ஊராட்சி புதுவளவு கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 42). விவசாயி. இவர் சேலத்தை சேர்ந்த பூங்கொடி என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்தநிலையில் கொல்லிமலை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கந்தசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் அந்த பெண்ணை கந்தசாமி 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் தனது மகளையும் அழைத்து வந்து விட்டார்.

இதையடுத்து 15 வயதுடைய அந்த மாணவி அரியூர் புதுவளவு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அனைவரும் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர்.

பாலியல் தொல்லை

கடந்த 10-ந் தேதி மாணவியின் தாயார் வெளியூருக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம், கந்தசாமி பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுபற்றி தனது தாயிடம் கூறியிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர், மாணவியிடம் பாலியல் தொல்லை செய்தது தெரியவந்தது.

கைது

இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கந்தசாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நாமக்கல் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்