விவசாயிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ெகாடுத்த விவசாயிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.;

Update:2023-03-22 02:20 IST

மதுரை வாடிப்பட்டி தெத்தூர் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது 70). விவசாயி. கடந்த 2013-ம் ஆண்டில் ஒரு கிராமத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு பெரியகருப்பன் சென்றார். அப்போது அங்கிருந்த 8 வயது சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கித்தருவதாக கூறி, தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றார். இதேபகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு அந்த சிறுமியை அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு அளித்து உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, இந்த சம்பவம் குறித்து தனது வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் கூடல்புதூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து, பெரியகருப்பனை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ஜான்சிராணி ஆஜரானார். முடிவில், பெரியகருப்பன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் நேற்று தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்