கோவையில் பச்சிளம் பெண் குழந்தை உயிரிழப்பு - காரணம் என்ன.?
இருமல் வந்ததால் குழந்தை எவ்வித உடல் அசைவும் இல்லாமல் இருந்தது.;
கோவை,
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் முரளிவேல், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வரதலட்சுமி (வயது 23). இவர்களுக்கு திருமணம் முடிந்து 1½ வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் கர்ப்பமான வரதலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த மாதம் 20-ந் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது.
வயிறுவலி மற்றும் சில பாதிப்புகள் இருந்ததால் அந்த குழந்தை திடீரென்று அழுதது. இதனால் சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த குழந்தைக்கு பால் கொடுக்கப்பட்டது. அப்போது திடீரென்று இருமல் வந்ததால் குழந்தை எவ்வித உடல் அசைவும் இல்லாமல் இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வரதலட்சுமி, உடனே கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றார்.அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பச்சிளம் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பால் குடிக்கும்போது புரை ஏறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.