வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

வள்ளியூர் பகுதியில் குற்றமுறு மிரட்டல், வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் தொடர்புடைய வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.;

Update:2026-01-09 08:16 IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு குற்றமுறு மிரட்டல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சீலாத்திகுளத்தை சேர்ந்த வினோத்கண்ணன் (வயது 28) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

அவர் நீதிமன்ற விசாரணைக்கு 5 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், வினோத் கண்ணனுக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மேற்சொன்ன வாலிபரை வள்ளியூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்