சாலை அமைத்து தரக்கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு

சாலை அமைத்து தரக்கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.;

Update:2023-09-30 00:11 IST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடி பேரூராட்சி 7-வது வார்டுக்கு உட்பட்ட அரசடிக்காட்டை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்த கலெக்டர் கற்பகத்திடம் கோரிக்கை மனுக்களை தனித்தனியாக வழங்கினர். அதில், அரசடிக்காடு பகுதியில் சுமார் 200 விவசாய குடும்பங்கள் வசித்து விவசாயம் செய்து வருகிறோம். விவசாயத்திற்கு இடு பொருட்கள் கொண்டு வருவதற்கும், விளை பொருட்களையும் சந்தைக்கு கொண்டு செல்வதற்கும், பொதுமக்களும் சரியான சாலை வசதி இல்லாமல் வனத்துறைக்கு சொந்தமான சாலையை பயன்படுத்தி வந்தோம். பின்னர் 85 விவசாயிகள் பொது பாதை அமைக்க தங்களது பட்டா நிலத்தை அரசுக்கு தான பத்திரமாக பதிவு செய்து கொடுத்துள்ளனர். ஆனால் 2 விவசாயிகள் ஆவணங்களை கொடுக்காமல் தடுத்து வருகின்றனர். இதனால் சாலை அமைக்க முடியாமல் உள்ளது. அரசுக்கு விவசாயிகளால் வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் சாலை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வருவாய் கோட்டாட்சியருக்கும், மாவட்ட கலெக்டருக்கு ஏற்கனவே மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே விவசாயிகள் நலன் கருதி சாலை அமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்